

எல்லா வயதினருக்கும் ஏற்ற அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்த பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் நிறைந்த மல்டி கிரேன் ஹெல்த் மிக்ஸ்
இதில் அடங்கிய பொருட்கள்
பாரம்பரிய அரிசி வகைகள்
கருப்பு கவுனி காட்டுயானம் மூங்கில் அரிசி மாப்பிள்ளை சம்பா குடவாழை அரிசி பூங்கார் அரிசி பார்லி அரிசி
சிறுதானியங்கள்
ராகி கம்பு சோளம் சம்பா கோதுமை வரகு சாமை திணை குதிரை வாலி
பயறு வகைகள்
வேர்க்கடலை பொட்டுக்கடலை பச்சைப் பயறு பாசிப்பருப்பு கொண்டைக்கடலை கொள்ளு கருப்பு உளுந்து மக்காச்சோளம் பாதாம் முந்திரி சோயா வெள்ளை எள் சீரகம் சுக்கு ஏலக்காய்
உட்கொள்ளும் முறை
சத்துமாவு கஞ்சி
ஒருத்தருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் மால்ட் மிக்ஸ் பவுடரை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து விட்டு பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டி கலந்து ஐந்து நிமிடங்கள் கிண்டி விட்டு இறக்கி அதில் அரை டம்ளர் பால் அல்லது தேங்காய் பால் ஊற்றி (அல்லது பால் இல்லாமலும்) அருந்தலாம்.
கார கஞ்சி
ஒருத்தருக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிண்டி விட்டு இறக்கினால் கார கஞ்சி ரெடி.
வெஜ் மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ் சூப்
நார்ச்சத்து உள்ள காய்கறிகள் அதாவது கேரட் பீன்ஸ் நூக்கல் சௌசௌ முள்ளங்கி வாழைத்தண்டு தக்காளி போன்றவற்றை சிறிது அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சூப் வைக்கும் பொருட்களான உப்பு மிளகு சீரகம் வெந்தயம் சிறிய வெங்காயம், மஞ்சள் தூள் பூண்டு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு காய் வெந்தவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஹெல்த் மிக்ஸ் பவுடரை கலந்து இன்னும் இரண்டு நிமிடங்கள் கிண்டி விட்டுக் கொண்டிருந்தால் வெஜ் மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ் சூப் ரெடி
தினந்தோறும் எல்லா வயதினரும் ஏதாவது ஒரு வகையில் மேற்கண்ட உணவு முறையை எடுத்துக் கொண்டால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவது மட்டுமல்லாமல் உடல் மிகவும் ஆரோக்கியமாக உறுதியாக இளமையாக இருக்க உறுதுணையாய் அமையும்.









Reviews
There are no reviews yet.