
*ஏழைகளின் உணவாகிய கேழ்வரகு அக்காலத்தில் உழைப்பவர்கள் அனைவரும் களி மற்றும் கூழாக பருகி வந்தமையால் நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ்ந்தார்கள்.
ஆனால் நாம் கேழ்வரகை மறந்துவிட்டு பாலிஷ் செய்த அரிசி உணவுகளை உட்கொள்வதால் நோய்களுக்கு உள்ளாகிறோம். ஆனால் அயல்நாட்டிலோ இவற்றின் மதிப்பு பல மடங்கு கூடி மதிப்புக் கூட்டு பொருட்களாக வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.*
ஆகவே தினமும் ஒருவேளை கேழ்வரகு உணவு உண்பதால் நம் உடலிலே கால்சியம் சத்து குறைபாடின்றி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.
கால்சியம் குறைபாட்டினால் எலும்பு வலி, எலும்பு முறிவுகள், மூட்டு வலி, பல் மாற்றங்கள், கண்புரை, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை), இதயத் தசைகளின் பலவீனம் போன்ற பிரச்சினையினால் அவதிப்படுகிறோம்.
இக்காலத்தில் களியோ அல்லது கூழோ செய்து சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இயற்கை மாறாமல் தரமான முறையில் தயாரிக்கப்பட்டதுதான் பாரம்பரிய அமிர்தத்தின் முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ்.
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
முளைகட்டிய கேழ்வரகு, மக்கானா(நீர் அல்லி குடும்பத்தைச் சேர்ந்த தாமரை விதைகளின் ஒரு வடிவம்), பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் அக்ரூட்.
முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸை பயன்படுத்தும் விதம்:
ஒரு கப் சூடான தண்ணீர் அல்லது பாலில், 1 டேபிள் ஸ்பூன்(15 கிராம்) முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ் சேர்த்து கலக்கவும். நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸின் நன்மைகள்:
முளைகட்டிய ராகி மால்ட் மிக்ஸ் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது, மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கவும், இரத்தம் உறைதலுக்கும் தேவைப்படுகிறது.
கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, இது ஒரு நல்ல தேர்வாகும்.
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும் இதனை உட்கொள்ளலாம்.
*இதில் உள்ள மக்கானா இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும், உடல் எடையை குறைக்க உணவுக்கு பதில் எடுத்துக் கொள்ளலாம்.
சோர்வு மற்றும் அசௌகரியத்தை குறைக்க வல்லது.






Reviews
There are no reviews yet.