

கருப்பு கவுனி அரிசியை நீண்ட நேரம் ஊறவைத்து பிறகு வேக வைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு உணவே இந்த கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்.
இதில் அடங்கிய பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி, பாசிப்பருப்பு, பச்சைப் பயறு, கொள்ளு, பூண்டு, வெந்தயம், மிளகு மற்றும் சீரகம்.
கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் தயாரிக்கும் முறை:
ஒருத்தருக்கு 2 டேபிள்ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் எடுத்து 300 ml தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு குறைந்த தீயில் கஞ்சி கெட்டிப் பதம் வரும் வரை கொதிக்கவிட்டு சிறிது நேரம் இடைவெளியில் கிண்டிவிட்டு இறக்கவும். கஞ்சி ரெடி.
சமைத்த கஞ்சியை சூடாகவோ அல்லது ஆறிய பின்னரோ நீங்கள் விரும்பினால், கஞ்சியில் தயிர், வெங்காயம் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் பருகலாம்.
காலை சிற்றுண்டிக்குப் பதிலாகவோ அல்லது ஒருவேளை உணவுக்கு பதிலாகவோ அனைத்து வயதினரும் எடுத்துக் கொள்ளலாம்.
கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸின் நன்மைகள்:
இது நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்ட சத்தான உணவாகும். மேலும் இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் அதிக உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
மேலும் இது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
கல்லீரலை பாதுகாக்கிறது. கண்பார்வைக்கு நல்லது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்கிறது.









Reviews
There are no reviews yet.